இரவு ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடிப்பு! 7 பேர் பலி
Syria
Crime
Bomb Blast
By Shankar
சிரியாவில் இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடித்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோதே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர், போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.
காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US