தைவான் சீனா இடையில் முறுகல் நிலை; அச்சமின்றி நடமாடும் மக்கள்!
தைவானிய நீரிணையில் அதிகளவிலான ராணுவ நடவடிக்கை இடம்பெறும் வேளையிலும் அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள சீனக் கரையோரங்களில் மக்கள் பயமின்றி நடமாடுகின்றனர்.
தைவானிய நீரிணையில் கடந்த பல ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள ராணுவ நடவடிக்கைகளைக் காட்டிலும் தற்போது ஆகக் கடுமையான பதற்றம் காணப்படுகிறது.
பெய்ஜிங் வெளியிட்ட எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தைவானுக்கு அமெரிக்க மக்களவை நாயகர் நென்சி பெலோசி சென்றிருந்தார்.
அதன் தொடர்பில் இன்று சீனா தைவானிய நீரிணையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆகப்பெரிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தைவானில் அதிகளவில் இடம்பெறும் கப்பல் வர்த்தகத்தைப் பாதிக்கச் சீனா அவ்வாறு செய்திருப்பதாக நம்பப்படுகிறது.
"போரா, எனக்குக் கவலையில்லை!" நீரிணையின் அருகில் இருக்கும் சீனாவின் ஃபூஜியனில் (Fujian) ஊழியர் ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஃபூஜியன் மாநிலம் தைவான் அருகிலுள்ள கடலைத்தாண்டி இருக்கிறது.
அங்கு அத்தகைய ராணுவ நடவடிக்கைகள் இடம்பெறுவது வழக்கம் என்று தெரியவந்துள்ளது.