சீனாவிற்க்கு எச்சரிக்கை விடுத்த தைவான் ராணுவம்
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் ஸ்பாட்டர் விமானம் தங்கள் நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.
இது குறித்து தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் Y-8 எலியின்ட் (ELINT) ஸ்பாட்டர் விமானம் தைவானின் தென்மேற்கில் உள்ள தீவில் நேற்று காணப்பட்டது.
சீன விமானத்தை உடனடியாகத் தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி வானொலி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. இந்த புலனாய்வு விமானத்தின் செயற்பாடுகளை கண்காணிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தினோம்.
இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் தைவானின் எல்லைக்குள் ஜனவரி 23 அன்று 39 சீன விமானங்கள் ஊடுருவி உள்ளது என தெரிவித்துள்ளன.