பிரதி அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது தலிபான்கள்!
தலிபான்கள் பிரதி அமைச்சர்கள் பெயர் பட்டியலை அறிவித்துள்ளள நிலையில், அதில் பெண்கள் எவரும் உள்வாங்க்கப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற புதிய மாநாட்டில் இந்த பட்டியலை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வழங்கினார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் நடத்தையுடன் அதன் அங்கீகாரம் இணைக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச எச்சரிக்கை இருந்தபோதிலும், இன்று வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் பெண்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
முஜாஹித் அமைச்சரவையின் விரிவாக்கத்தை பாதுகாத்தார், அதில் ஹசாராஸ் போன்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாகவும், பெண்கள் பின்னர் சேர்க்கப்படலாம் என்றும் முஜாஹித் இதன்போது சுட்டிக்காட்டினார்.
செப்டம்பர் 7 ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்ய இடைக்கால அமைச்சரவையை அறிவித்தனர்.
இதேவேளை தலிபான்கள் ஆப்கானில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், அதன் நிறுவன உறுப்பினர் மொஹமட் ஹசன் அகுந்த் அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவார் என கூறியதுடன், தலிபான்கள் பயங்கரமான ஹக்கானி வலையமைப்பின் பல தலைவர்களையும் முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.