ராணுவ விமானங்களில் ஊஞ்சல்ஆடும் தலிபான்கள்; அமெரிக்காவை சீண்டும் சீனா!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ.
அந்த ட்வீட்டில் அவர், பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் ராணுவ தளவாடங்களும் தலிபான்கள் அமெரிக்க ராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர் என அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்தே அமெரிக்காவை சீனா கிண்டலடித்து சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் ராணுவ விமானங்களை தலிபான்கள் பொம்மை போல் பயன்படுத்தும் வீடியோவை சீனா கிண்டல் செய்துள்ளது.
அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில், கடந்த 15 ஆம் திகதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கான் வந்தது. அதன் பின்னர், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்நிலையில் அதிபர் பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்ததன்படி ஆகஸ்ட் 31 ஆம் திகதி அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டன.
அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துவிட்டே கிளம்பியது.
இந்நிலையில் அவர்கள் விட்டுச்சென்ற விமானங்களில் தலிபான்கள் ஊஞ்சல் கட்டி ஆடும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.