உலக புகழ்பெற்ற நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் நியமனம்!
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற டெல்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் (Elon Musk) , தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரை தனது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசாமி (Ashok Elluswamy) என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவில் வாழும் தமிழரான அசோக் எல்லுசாமி என்பவர் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் வடிவமைப்பு குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை எலான் மஸ்க் (Elon Musk) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே கூகுள் உள்பட பல நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் (Elon Musk) அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் தமிழர் ஒருவர் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது