பிளாட்பார்மில் தொடங்கி கனடாவில் கோடீஸ்வரர் ஆன தமிழர்: எப்படி தெரியுமா?
கனடாவின் டொராண்டோ மாகாணத்தில் வசித்து வருபவர் தான் தமிழகத்தை சேர்ந்த ஷாஸ் சாம்சன்(Shaws Samson) 50 வயதான இவர் ஆரம்ப காலத்தில் வறுமையின் காரணமாக பேருந்து நிலையில் கூடாரம் அமைத்து வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வெளியூருக்கு வேலை தேடி சென்ற சமயத்தில் சாம்சன் தனத பெற்றோரை தவறவிட்டுளார். அதனை தொடர்ந்து சாம்சன் தெருவில் உள்ள குப்பை தொட்டிகளில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்ட தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குழந்தைகள் நலத்துறைக்கு ஆதரவற்ற நிலையில் 8 வயது சிறுவன் ஒருவன் சுற்றி திரிவதாக புகார் சென்றுள்ளது.
அதனையடுத்து மீட்கப்பட்ட சாம்சன் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின்பு சாம்சனை கனடாவை சேர்ந்த தமபதியினர் 1979ஆம் ஆண்டில் தத்தெடுத்துள்ளனர்.
அதன் பிறகு சில ஆண்டுகளில் தனத்துக்கு விருப்பமான சமையலை தனது தொழிலாக மாற்றிக் கொண்டு தனி ஹோட்டல் ஒன்றினை திறந்தார்.
அதன் வாயிலாக சாம்சன் தற்போது கோடிக்கணக்கில் சம்பாதித்து கோடீஸ்வரராக வலம் வருகிறார்.