அமெரிக்கப் பொருட்களை புறக்கணிப்பதாக கனடியர்கள் தெரிவிப்பு
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க போவதாக சில கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்திருந்தார்.
ஏற்றுமதி பொருட்கள் மீது 25 வீத வரி விதிக்கப்பட்டிருந்தது இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அமெரிக்க பண்டங்களை நிராகரிக்க போவதாக கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு கருத்துக்களை வெளியிட்ட போது இவ்வாறு கனடிய பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப் போவதாக குறித்த கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.