இசை நிகழ்ச்சி டிக்கெட் வழங்கி மகளை நெகிழச் செய்த தாய்!
பிரபல பாடகி டெய்லர் ஷிப்ட்டின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கட் கொள்வனவு செய்து கொடுத்து கனடிய தாய் ஒருவர், தனது மகளை நெகிழச்சி செய்துள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சிக்காக டிக்கட் கொள்வனவு செய்து முதல் தடவை 1600 டொலர்களை இழந்த பெண், இரண்டாவது தடவையாக இவ்வாறு டிக்கட் கொள்வனவு செய்துள்ளார்.
ஒராண்டுக்கு முன்னதாக டெய்லர் ஷிப்ட் இசை நிகழ்ச்சிக்காக டிக்கட் கொள்வனவு செய்ய முயற்சித்த 1600 டொலர்களை குறித்த பெண் இழந்துள்ளார்.

இதனால் 15 வயதான தனது மகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இரண்டாவது தடவையாக டிக்கட் கொள்வனவு செய்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் ரொறன்ரோவில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு இவ்வாறு டிக்கட் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        