கனடாவில் கழிப்பறை பயன்படுத்த அனுமதிக்காத ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை!
கனடாவில் மாணவர் ஒருவர் கழிப்பறையை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காத ஆசிரியர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்த ஆசிரியர் குறித்த பாடசாலையில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கழிப்பறை செல்ல அனுமதிக்குமாறு மாணவர் விடுத்த கோரிக்கையை ஆசிரியர் நிராகரித்து விட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் கழிப்பறை செல்ல அனுமதி கோரினால் ஆசிரியர்கள் அதற்கு அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.