பாடசாலை வகுப்பறையில் உறங்கிய ஆசிரியைக்கு நேர்ந்த கதி... வைரலான வீடியோ!
இந்தியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் தூங்குவதும், அவருக்கு மாணவிகள் விசிறி கொண்டிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம், தானிபூர் பகுதியில் உள்ள பாடசாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாய் விரித்து தூங்குவதும், அவருக்கு பாடசாலை மாணவிகள் ஒவ்வொருவராக விசிறி கொண்டிருப்பது போன்றும் வீடியோ காட்சிகள் உள்ளன.
அதில், ஒரு மாணவி ஆசிரியையின் தலைக்கு அருகில் அமர்ந்து அவருக்கு விசிறி கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனங்களை பதிவிட்டனர்.
Government school teacher caught sleeping & snoozing nicely in Agra.
— Sneha Mordani (@snehamordani) July 29, 2024
Students made sure ki unko garmi na lage🙂 pic.twitter.com/IL16o3IKmw
இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், 'ஆசிரியர்களே இப்படி இருக்கும் போது பாடம் கற்பிப்பது எப்படி இருக்கும். வெயிலில் இருந்து விடுபட அப்பாவி குழந்தைகளை விசிற வைக்கிறார் ஆசிரியை' என விமர்சித்துள்ளார்.
இந்த காணொளி வைரலானதை அடுத்து வகுப்பறையில் பாய் விரித்து உறங்கிய ஆசிரியை டிம்பிள் பன்சால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.