கனடாவில் இளம்பெண் ஒருவருக்காக டெக்ஸி அனுப்பிய நபர்: புகைப்படம் வெளியிட்டு அடையாளம் தேடும் பொலிஸ்
பிராம்டனில் இளம்பெண் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அடையாளம் காண கோரிக்கை வைத்துள்ளனர்.
பிராம்டனில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் திகதி மர்ம நபர் ஒருவர் வில்லியம்ஸ் பார்க்வே மற்றும் ஜேம்ஸ் பாட்டர் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்கு வாடகை டெக்ஸியை அனுப்பி 18 வயது பெண் ஒருவரை அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளார்.
குறித்த இளம்பெண் அந்த டெக்ஸியில் அழைத்துச் செல்லப்பட்டு, ரொறன்ரோவில் ரகசிய பகுதி ஒன்றிற்கு கொண்டு சென்று துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிசார், குறித்த இளம் பெண்ணிடம், தமக்கு சிறுமிகள் மீது தான் ஆசை இருப்பதாக அந்த நபர் கூறியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், 30 வயதுடைய அந்த நபர் 5 அடி 6 அங்குலம் இருக்கலாம் எனவும் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவாராக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த இடம் தொடர்பில் தகவல் சேகரித்து வருவதாகவும், சந்தேக நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை திரட்டப்படுவதாகவும்,
அந்த நபரிடம் மேலும் பல இளம் பெண்கள் அல்லது சிறுமிகள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.