நீராவி இன்ஜின் தொடருந்தில் அடிபட்டு இளம்பெண் பலி ; இணையத்தில் வைரலாகிய வீடியோ
மெக்சிகோ ஹிடால்கோ பகுதியில் 1930ல் உருவாக்கப்பட்ட நீராவி இன்ஜின் தொடருந்தின் நுழைவை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இளம்பெண்ணின் தலையில் தொடருந்தின் எஞ்சின் மோதியதில், பலத்த காயமடைந்த பெண் அடிபட்ட நொடியிலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கனடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்பு இணைப்பைக் கொண்டாடுவதற்காக 1930 ஆம் ஆண்டில் உருவாக்கிய நீராவி இன்ஜின் தொடருந்து கடந்த ஏப்ரல் மாதம் கல்கரியில் இருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் கனடா வழியாக மெக்சிகோ சென்றடைய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் நாளை மெக்சிகோவில் தனது பயணத்தை முடித்து பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பிய அங்கேயே ஓய்வு பெறுகிற நிலையில், தொடருந்து மெக்சிகோவுக்குள் நுழைந்ததும் புகைப்படம் எடுக்க ஹிடால்கோ பகுதி அருகே ஏராளமானோர் திரண்டனர்.
அப்போது, தன் மகனுடன் வந்திருந்த இளம்பெண் ஒருவர் பேரரசி ரெயில் முன்பு செல்பி எடுக்க தனது செல்போனை எடுத்தார். ரெயில் அருகே வரும்போது, தண்டவாளம் அருகே சென்ற இளம்பெண் செல்போனுடன் முட்டிபோட்டு அமர்ந்தார்.
அப்போது, ரெயிலின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெண் அடிபட்ட நொடியிலேயே உயிரிழந்தார்.
MEXICO - In Hidalgo, a famous train that comes from Canada and travels all the way to Mexico City, attracting locals, struck a woman who was trying to take a selfie as the train approached. She passed at the scene. Article in comments. pic.twitter.com/32XdsCehEB
— The Many Faces of Death (@ManyFaces_Death) June 5, 2024