இரவு உடையுடன் சாலையில் உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இரவில் வாகனம் ஓட்டிச்சென்ற இளம் பெண் ஒருவர் உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வாகனம் கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும், இரவு நேரத்திற்கான உடையில் இருந்தவர், உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
விஸ்கான்சின் மாகாணத்தின் Wrightstown பகுதியில் வசித்து வந்துள்ளார் 17 வயதான Daniela Itzel Velazquez. கடந்த சனிக்கிழமை இரவு தமது வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், கார் தனியாக கண்டெடுக்கப்பட்டுள்ளதையும் அடுத்து, அவரது தாயார் ஞாயிறன்று மதியத்திற்கு மேல் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார், முதற்கட்டமாக அவரது அலைபேசி மற்றும் சாவி, பணப்பை உள்ளிட்டவைகளை மீட்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இரவு வெப்பநிலை சுமார் 12 டிகிரி பாரன்ஹீட் வரை குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கார் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் கால் மைல்கள் தொலைவில் உடல் உறைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை Velazquez சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடுமையான பனிப்பொழிவு நேரத்தில் Velazquez வெறும் இரவு உடையுடன் பயணித்துள்ளதும், விபத்தில் சிக்கியதும் மரண காரணமாக கூறப்படுகிறது.