ஏரியில் கவிழ்ந்த படகு... இரண்டு உயிர்களைக் காப்பற்றிய சிறுவனுக்கு வீரப்பதக்கம்

Canada
By Balamanuvelan Jul 25, 2026 07:13 AM GMT
Report

கனடாவில், ஏரி ஒன்றில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் ஒருவனுக்கு வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள Wabamun ஏரியில் பொழுதுபோக்குவதற்காக தங்கள் பெற்றோருடன் சென்றுள்ளனர் பெஞ்சமினும் (Benjamin Gerber) அமெலியாவும் (Amelia).

பெஞ்சமினுக்கு அப்போது 12 வயது, அமெலியாவுக்கு 10 வயது. 

ஏரியில் கவிழ்ந்த படகு... இரண்டு உயிர்களைக் காப்பற்றிய சிறுவனுக்கு வீரப்பதக்கம் | Teen Got Medal For Save Lives In Boat Capsize

ரப்பர் படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெஞ்சமினும் அமெலியாவும் கரைக்குத் திரும்பும்போது, படகு ஒன்று கவிழ்ந்து கிடப்பதையும், இரண்டு ஆண்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறார்கள் இருவரும்.

அவர்களில் ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார்.

உடனே பெஞ்சமின் கரையிலிருந்த தன் தாயைப் பார்க்க, என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய், போ என்று அவர் கூற, உடனே தண்ணீருக்குள் குதித்துள்ளார்கள் பிள்ளைகள்.

விடயம் என்னவென்றால், பெஞ்சமினும் அமெலியாவும் அருமையாக நீந்துபவர்கள், மட்டுமின்றி, இருவரும் Junior Lifeguard Club என்னும் அமைப்பில் உறுப்பினர்கள்.

ஆக, உடனே இருவரும் தண்ணீருக்குள் குதிக்க, பெஞ்சமின் சுயநினைவின்றிக் கிடந்தவரை 80 அடி தூரத்துக்கு இழுத்துக்கொண்டே நீந்தி கரைக்குக் கொண்டுவந்துள்ளார்.

இத்தனைக்கும் 12 வயதேயான பெஞ்சமினை ஒப்பிடும்போது அந்த நபரின் எடையும் அதிகம், உயரமும் அதிகம். இருந்தாலும் சற்றும் யோசிக்காமல், தனது நீச்சல் பயிற்சியை நம்பி அவரை கரை சேர்த்துள்ளார் பெஞ்சமின்.

இந்நிலையில், இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய பெஞ்சமினுக்கு தற்போது வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், M.G. Griffiths Certificate என்னும் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த M.G. Griffiths Certificate என்பது, கனடாவின் Lifesaving Society Canada என்னும் அமைப்பு வழங்கும், நாட்டிலேயே இரண்டாவது உயரிய வீர விருது ஆகும்.

பெஞ்சமினின் தங்கையான அமெலியாவைப் பொருத்தவரை, சான்றிதழ் பெற, அவர் தனக்கு 15 வயது ஆகும் வரை காத்திருக்கவேண்டும். 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US