கனடாவில் தீ விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சிறுவன் கைது
கனடாவில் தீ விபத்து சம்பவம் என்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறுவன் ஒருவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
16 வயதான சிறுவன் ஒருவனே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடு ஒன்றுக்கு குறித்த சிறுவன் தீ மூட்டியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தென் மிசிசாகாவின் லோக்ஸோர் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் நாய் ஒன்று தீ விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். தீ முழுமையாக கட்டுப்படுத்த பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.