மொன்ட்ரியலில் சிறுவன் மீது கத்தி குத்து
கனடாவின் மொன்ட்ரியல் நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பொயின்டி ஒக்ஸ் டெரெம்பள்ஸ் Pointe-aux-Trembles பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் செயின்ட்-ஜீன் பாப்டிஸ்ட் பூலவர்டு மற்றும் ரெனே-லெவெஸ்க் தெருவுக்கு அருகிலுள்ள ஒரு வணிகக் கட்டடத்தின் வாகனத் தரிப்பிடப் பகுதியில் இடம்பெற்றது.
மொன்ட்ரியல் காவல்துறைக்கு (SPVM) நேற்று இரவு 10:45 மணிக்கு பல 911 அழைப்புகள் வந்துள்ளன.
அங்கு சென்ற காவல்துறையினர், அந்த சிறுவனை மேல் உடல் பகுதியில் காயங்களுடன் கண்டனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பல இளைஞர்களுக்கிடையிலான ஒரு வாக்குவாதம் பெரிதாகி ஏற்பட்ட தகராறு என முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை