கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு ; காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு
கனடாவின் டொராண்டோவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
டொராண்டோவில், ஞாயிற்றுக்கிழமை இரவு North York பகுதியில் நடந்த போக்குவரத்து கட்டுப்பாட்டு சோதனையின் போது,
பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது இளைஞர் உயிரிழந்ததாக ஒன்டாரியோ மாகாணத்தின் சிறப்பு விசாரணை நிறுவனம் (SIU) இன்று morning உறுதி செய்துள்ளது.
SIU வெளியிட்ட தகவலின் படி, ஷெப்பர்ட் அவென்யூ மேற்கு மற்றும் பாதர்ஸ்ட் வீதி சந்திப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
பொலிசார் மற்றும் இளைஞர் இடையே “துப்பாக்கிச் சூடு பரிமாற்றம்” இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடாபில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.