குறைவான மதிப்பெண் வழங்கிய ஆசிரியர்: மாணவர்கள் இருவரின் கொடுஞ்செயல்
அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி ஆசிரியரை கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில் இரு மாணவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் ஃபேர்ஃபீல்ட் நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் வில்லார்ட் மில்லர் மற்றும் ஜெர்மி குடேல் ஆகிய இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, குறைவான மதிப்பெண்கள் தொடர்பான தகராறு காரணமாக, தங்கள் ஸ்பானிஷ் ஆசிரியரான நோஹேமா கிராபரை கொலை செய்ய திட்டமிட்டதாக இரண்டு பதின்ம வயதினரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், அவரை கொலை செய்த பின்னர் தரவுகளை மொத்தமாக அழித்ததாகவும் இருவரும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர். 2021 நவம்பர் 6ம் திகதி ஆசிரியர் நோஹேமா கிராபர் கொலை செய்யப்படுவதற்கும் இரண்டு வாரங்கள் முன்னர், இரு மாணவர்களும் கொலை செய்வது தொடர்பில் திட்டமிட்டுள்ளனர் என்றே நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மில்லர் தான் குடேல் என்பவரை இந்த கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் மில்லருக்கு எதிராக சாட்சியம் அளிக்கவும் குடேல் தயாரானதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் நோஹேமா கிராபரின் சடலமானது அவர் மாயமனதான புகார் அளிக்கப்பட்ட அன்று ஃபேர்ஃபீல்ட் நகர பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது. பொதுவாக ஆசிரியர் கிராபர் அந்த பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவார் என்றே கூறப்படுகிறது.
மேலும், தமது வாகனத்தில் அந்த பூங்காவுக்கு சென்ற ஆசிரியர், பின்னர் அந்த வாகனத்தை இரு இளைஞர்கள் ஓட்டிச் செல்வதை அப்பகுதியில் சிலர் கவனித்துள்ளனர்.