ஒலிம்பிக் போட்டியை நிறுத்த சதி? பிரான்சில் தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கம்!
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த சதியா...
இந்நிலையில் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது.
பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் இன் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதனால் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில்,
ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரான்ஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.