கால்பந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற பயங்கர சம்பவம்!
பலூசிஸ்தானில் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட எறிகுண்டு தாக்குதலில் காவலர் உள்பட 3 பேர் காயமடைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பலூசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் விமான நிலைய சாலையில் அமைந்த துர்பத் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி ஒன்று நேற்று நடந்து கொண்டு இருந்தது. இதில், வீரர்களின் விளையாட்டை காண ரசிகர்கள் கூடியிருந்தன.
இந்த நிலையில், திடீரென கால்பந்து போட்டி நடந்த மைதானத்திற்கு அருகே வெடிசத்தம் கேட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதில், எறிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்கு கால்பந்து மைத்தானம் இலக்காக கொள்ளப்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த எறிகுண்டு தாக்குதலில் காவலர் ஒருவர் உள்பட 3 பேர் காயமடைந்து உள்ளனர்.
அவர்கள் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.