பாடசாலை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்: 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு உகாண்டாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் இதுவரையில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கோ எல்லைக்கு அருகே உள்ள பாடசாலைக்குள் இரவுவேளையில் புகுந்த ISiS அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்கள் குழு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அந்த பாடசாலையில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்ததாகவும், மாணவிகள் உட்பட சிலர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின் பின்னர் கிளர்ச்சியாளர்களால் பாடசாலை கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.