காசாவில் விடுவிக்கப்பட்ட தாய்லாந்து பிணைக்கைதிகள் நாடு திரும்பினர்
காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணைக் கைதிகள் குழு தமது நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
தாய்லாந்து விமான நிலையம் வந்திறங்கிய பிணைக் கைதிகள் இஸ்ரேல்-தாய்லாந்து கொடிகள் பதித்த சட்டைகளை அணிந்து இருந்தனர்.
தாயகம் திரும்பிய அவர்கள் கடந்த அக்டோபர் 7 தாக்குதலில் பலியான சக தொழிலாளர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
அக்டோபர் 7 தாக்குதலில் 39 தாய்லாந்து நாட்டினரை கொன்றதுடன் 32 தொழிலாளர்களைக் ஹமாஸ் கடத்திச் சென்றதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காசாவில் விடுவிக்கப்பட்ட மொத்தம் 23 பேரில் 17 பேர் கொண்ட முதல் குழு வியாழன் அன்று திரும்பியது, ஒன்பது பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை போருக்கு முன்பு, சுமார் 30,000 தாய்லாந்து தொழிலாளர்கள் விவசாயத் துறையில் பணிபுரிந்தனர்.
அதுமட்டுமல்லாது இஸ்ரேலின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த தொழிலாளர் குழுக்களில் தாய்லாந்து விவசாயத் தொழிலாளர்கள் குழுவும் ஒன்றாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.