விதிகளை மீறி விமானத்தில் நடத்த கொண்டாட்டம்! கடும் கோபத்தில் கனடா பிரதமர்

Canada Justin Trudeau
By Balamanuvelan Jan 06, 2022 11:38 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

நாடு கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் பார்ட்டி நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அது குறித்து ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மற்ற கனேடியர்களைப் போல, தானும் அந்த விமான பார்ட்டி வீடியோவைப் பார்த்ததாகவும், அதைப் பார்த்து தான் கடும் எரிச்சலடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கூட குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதைக் கூட கட்டுப்படுத்திக்கொண்டு, மாஸ்க் அணிந்துகொண்டு மக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள பாடுபடும் நேரத்தில், இப்படி தங்கள் சக குடிமக்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தியுள்ள இவர்களது செயல் முகத்தில் அறைவதற்கு சமமான அவமதிக்கும் செயலாகும் என்றார் ட்ரூடோ.

இதற்கிடையில், இப்படி நாட்டின் பிரதமர் முதலானவர்களிடம் திட்டு வாங்குவதுடன் அந்த பார்ட்டி நடத்தியவர்கள் தப்பித்துவிடமுடியாது. பெடரல் அரசு அவர்கள் மீது விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.


அத்துடன், ஒரு குற்றச்செயலுக்கு 5,000 கனேடிய டொலர்கள் வீதம், கடுமையான அபராதமும் அந்த பார்ட்டியில் பங்கேற்றவர்கள் செலுத்தவேண்டிவரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் முதலனாவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து அறியாதவர்களுக்கு, நடந்தது என்னவென்றால், 111 Private Club என்ற குழுவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலங்கள், டிசம்பர் 30ஆம் திகதி, கனடாவின் மொன்றியலிலிருந்து மெக்சிகோவிலுள்ள Cancun என்ற இடத்துக்கு விமானம் ஒன்றில் பயணித்துள்ளார்கள்.

அப்போது, அவர்கள் மாஸ்க் அணிவது முதலான எவ்வித விமான கட்டுப்பாடுகளையோ, கொரோனா கட்டுப்பாடுகளையோ பின்பற்றவில்லை. அத்துடன், மது அருந்திக்கொண்டும், கஞ்சா புகைத்துக்கொண்டும் நடுவானில் ஆட்டம் போட்டுள்ளார்கள் அவர்கள்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து கடும் சர்ச்சை உருவாகவே, அரசு அவர்கள் மீது அபராதம் முதல் சிறைத்தண்டனை முதலான கடும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

விதிகளை மீறி விமானத்தில் நடத்த கொண்டாட்டம்! கடும் கோபத்தில் கனடா பிரதமர் | The Affair Of The Party On The Plane

விதிகளை மீறி விமானத்தில் நடத்த கொண்டாட்டம்! கடும் கோபத்தில் கனடா பிரதமர் | The Affair Of The Party On The Plane

விதிகளை மீறி விமானத்தில் நடத்த கொண்டாட்டம்! கடும் கோபத்தில் கனடா பிரதமர் | The Affair Of The Party On The Plane

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US