அதிக பார்வையாளர்களை ஈர்த்த அமெரிக்க அதிபர், துணை அதிபரின் கேலி வீடியோ!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலாஹாரிஸ் ஆகியோரை கேலியாக சித்தரித்து சவுதி அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட கேலி வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க கொடிக்கு முன்னால் நிற்கும் பைடன் கை குலுக்குவதற்கு ஆள் கிடைக்காமல் அங்கும் இங்கும் கைகளை நீட்டியவாறு செல்வதும், அப்போது அங்கு வரும் கமலாஹாரிஸ் உதவுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
SAUDIS MAKING FUN OF SLEEPY JOE AGAIN!!!??? @AsaadHannaa pic.twitter.com/d1BDv0YUME
மற்றொரு காட்சியில், விமானத்தில் சல்யூட் செய்துக் கொண்டே ஏறும் பைடன் சறுக்கி கீழே விழுவதையும் அதனை கமலா ஹாரிஸ் அதிர்ச்சியுடன் பார்ப்பதாகவும் வீடியோ உள்ளது.