கனடா காட்டுத்தீயை அணைப்பதற்காக செலவு செய்துள்ள பெரும்தொகை: எவ்வளவு தெரியுமா?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ பல இடங்களை கபளீகரம் செய்த நிலையில், அதை அணைப்பதற்காக, அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை அணைப்பதற்காக இந்த ஆண்டு 136 மில்லியன் பவுண்டுகள் அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவாகியுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியரான John Horgan தெரிவித்துள்ளார்
அதாவது, பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீயை அணைப்பதற்காக 500 மில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளது என்கிறார் அவர்.
ஏப்ரல் 1 முதல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இதுவரை 1,552 இடங்களில் காட்டுத்தீ பற்றிய நிலையில், 864,473 ஹெக்டேர் நிலம் தீயால் எரிந்து நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.