ஒரு கொரோனா நோயாளிக்கு கனடா மருத்துவமனையில் செலவாகும் தொகை ஏவ்வளவு: வெளியான தகவல்
கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு கொரோனா நோயாளிக்கான சராசரி செலவு 23,000 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கான செலவானது மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவரின் சராசரி செலவான 8,000 டொலர் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
மட்டுமின்றி சிறுநீரக மாற்று நோயாளி ஒருவருக்கு சராசரியாக செலவாகும் 27,000 டொலர் தொகை அளவுக்கு கொரோனா நோயாளிகளுக்கும் செலவாகிறது என சுகாதார தகவலுக்கான கனேடிய நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனேடியர்கள் சராசரியாக 15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை தரவு காட்டுகிறது. ஆனால் நிமோனியா பாதிப்பால் நோயாளி ஒருவர் சராசரியாக 7 நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்குவதாக தெரிய வந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக நோயாளிகள் அதிக நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையும் உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஏறக்குறைய 4ல் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் அதில் 5ல் 1 ஒருவர் இறப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒரு கொரோனா நோயாளிக்கு 55,000 டொலர் செலவாகும் என தெரிய வந்துள்ளது. ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படாத ஒரு கொரோனா நோயாளிகளுக்கு 15,000 டொலர் அளவுக்கு செலவாகியுள்ளது.
ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒரு நிமோனியா நோயாளிக்கு 22,000 டொலர் அளவுக்கு செலவாகும் எனவும், தீவிர சிகிச்சை பிரிவில் மாரடைப்பு நோயாளிக்கு சராசரியாக 8,400 டொலர் செலவாகும் எனவும், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சராசரியாக 4,959 டொலர் செலவாகும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.