ஜெர்மனியில் முதியவரின் மோசமான செயல்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஜெர்மனி நாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் கொரோனா தடுப்பூசி வந்ததிலிருந்து இதுவரை மொத்தம் 90 தடுப்பூசிகளை போட்டுள்ளார்.91வது தடுப்பூசி போட வரும் போது அவர் மாட்டிக்கொண்டார்.
இதை இவர் தடுப்பூசி போட வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்யவில்லை. தடுப்பூசி போடப்படும் போது தரப்படும் சான்றிதழ்களை விற்பனை செய்ய இப்படி செய்துள்ளார்.
பொது இடங்களில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அந்நாட்டில் சட்டம் இருந்தது.
இதையடுத்து தடுப்பூசி போட விருப்பம் இல்லாதவர்கள் இவரிடம் பணம் கொடுத்து அவர்களது பெயரில் இவர் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த சான்றிதழை விற்பனை செய்துள்ளார்.
இந்ந விவகாரம் 91வது தடுப்பூசி போட வந்த போது தான் தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து அவர் யாருக்கெல்லாம் சான்றிதழ்களை விற்பனை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெர்மனியில் மக்கள் பலர் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மன நிலையில் இருப்பதாகவும் அதில் பலர் இவ்வாறு போலி சான்றிதழ்களை வாங்கி வருவதாகவும், கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்; வெளியான அதிர்ச்சி தகவல்!