புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது; சென்றவர்கள் நிலை என்ன?
அமெரிக்காவில் Puerto Rico கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் சுமார் 11 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அதில் பயணம் செய்த , டஜன் கணக்கானவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான பயணத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த கப்பல் வியாழன் மதியம் கவிழ்ந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Puerto Rico-வின் மேற்குக் கடற்கரையிலிருந்து மக்கள் வசிக்காத வனவிலங்கு புகலிடமான Desecheo தீவிற்கு வடக்கே 11 மைல் தொலைவில் நீரில் மூழ்கிய கப்பலையும், அதிலிருந்த மக்களையும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு விமானம் கண்டது.
இதையடுத்து குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடலோரக் காவல்படை போரின்குவென் விமான நிலையத்திலிருந்து பல ஹெலிகாப்டர்களை அனுப்பியது.
இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடலோரக் காவல்படை கட்டர் ஜோசப் டெசானோஸைத் திருப்பியனுப்பியது. கடலோர காவல்படையின் கூற்றுப்படி, 31 பேர் உயிர் பிழைத்துள்ளதுள்ள அதேசமயம், பயணிகள் யாரும் உயிர் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படகு கவிழ்வதற்கு முன்பு அதில் இருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. விபத்துள்ளான படகு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களை ஏற்றிச் சென்றதாக புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.



