ட்ரம்பை புறக்கணித்த பிரித்தானியா
லண்டனில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள 2 ஆம் எலிசபெத்(Queen Elizabeth II) மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பிற்கு(Donald Trump) அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
பாரம்பரியத்திலிருந்து விலகி, மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது.
தற்போதைய நாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது பாரியார் அல்லது இணைந்து வாழ்பவருக்கு மட்டுமே இந்த கௌரவம் வழங்கப்படும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச செய்தி தெரிவித்துள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஆனால் இந்த அழைப்பு "ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு மட்டுமே" வழங்கப்பட்டுள்ளது. மகாராணி எலிசபெத்தின்(Queen Elizabeth II) அரச இறுதிச் சடங்கில் உலகெங்கிலும் உள்ள ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் மன்னர்கள், ராணிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராணி எலிசபெத்தின்(Queen Elizabeth II) இறுதிச் சடங்கு செப்டம்பர் 19 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதே தேவாலயத்தில் தான் மகா ராணி எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா 1953-ம் ஆண்டு நடைபெற்றதாக சர்வதேச செய்தி வெளியிட்டுள்ளது.
மறைந்த மகாராணி எலிசபெத்தை(Queen Elizabeth II) ஒருபோதும் தவறு செய்யாத ஒரு சிறந்த பெண் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத்(Queen Elizabeth II) , தனது 96வது வயதில் ஸ்கொட்லாந்தில் பால்மோரலில் 8 ஆம் திகதி காலமானார்.