கொழும்பு பேருந்தை ஓட்டி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பு
கொழும்பு, மத்தேகொட பிரதேசத்தில் பேருந்து ஒன்றை ஓட்டிச் சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பேருந்தை ஓட்டிச் சென்ற பேரூந்து சாரதி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அயல் வீட்டுச் சுவரை உடைத்துக்கொண்டு சென்று பேருந்தை நிறுத்தியுள்ளார்.
பேருந்திற்குள்ளேயே பேருந்து சாரதி உயிரிழந்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவ பிலியந்தலை 342 பஸ் வழித்தடத்தில் இன்று காலை 5.45 மணியளவில் முதல் பயணத்தை ஆரம்பிக்க கொட்டாவ பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது சாரதிக்கு மத்தேகொட பிரதேசத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அப்போது, பேருந்தில் இருந்த நடத்துனர் சாரதி இருக்கைக்கு சென்று பார்த்தபோது, சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவதிப்பட்டதைக் கண்டார். பின்னர், இதுகுறித்து பஸ் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 1990என்ற ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, சாரதி இறந்து விட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பஸ் உரிமையாளரின் தலையீட்டின் பேரில் சடலத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீதியை விட்டு விலகிச் சென்ற பேருந்து சுவரை உடைத்து ஒரு வீட்டின் அருகே நின்றது.
அப்போது வீட்டிற்குள் தம்பதியும் குழந்தையும் தங்கியிருந்தனர். எனினும் அவர்கள் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கஹதுடுவ, உஸ்வத்த வீதி இலக்கம் 80/C/3 இல் வசிக்கும் வீரதுங்க ஆராச்சிகே கபில பெரேரா என்ற 54 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.