உக்ரைனுக்கு ஆதரவாக ஈஃபிள் கோபுரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
ஈஃபிள் கோபுரம் உக்ரேனின் கொடி நிறத்தில் ஒளிரவிடப்பட உள்ளது. ரஷ்யா-உக்ரேன் போர் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய உள்ளது.
தலைநகர் பாரிஸ் மிக உறுதியாக உக்ரேனுக்கு ஆதரவாக உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை இரவு இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமையுடன் ரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய உள்ளது.
ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரவிடப்பட உள்ளது.
இதனை பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார். “யுத்தம் தொடங்கி ஒருவருடம் கழித்தும், பாரிஸ் உக்ரேனிய மக்களுக்காக தனது அசைக்கமுடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என ஆன் இதால்கோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.