மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டைனோசர்...வெளியான காணொளி
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு எளிதாக சென்றடையும். அந்த வகையில் ஐ.நா.வின் வளர்ச்சி திட்ட முகாமையானது பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த டைனோசரை வைத்து கிராபிக்ஸ் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த காணொளிக்கு கனறனமாக கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தற்காகவே இந்த காணொளியானது உருவாக்கப்பட்டது.
இந்த கிராபிக்ஸ் காணொளியில் ஐ.நா. தலைவர்கள் முன்னிலையில் டைனோசர் உரையாடுவதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. "மனிதர்களே உங்களது அழிவைத் நீங்களே தேடிக் கொள்ளாதீர்கள்,அதைனை தவறிகூட ஒருபோதும் தேர்வு செய்து விடாதீர்கள். உங்களை நீங்கள் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும். நேரம் தாழ்ந்து விடவில்லை, இன்னும் கூட காலம் இருக்கிறது,.மேலும் சிறிது மாற்றங்களை செய்து கொண்டு உங்களது இனத்தை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள்" என்று அந்த டைனோசர் கூறுகிறது.
இந்த காணொளியானது பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்த்து ஐ.நா. வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவின் இறுதியில் dontchooseextinction.com என்ற இணையதளத்திற்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்தில் பருவ நிலை மாற்றத்தால் உண்டாகக்கூடிய அழிவிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் பற்றி விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது .
"Extinction is a bad thing. Driving yourselves extinct is the most ridiculous thing":@frankiethedino.
— United Nations in India (@UNinIndia) October 28, 2021
The computer-generated dinosaur enters #UNGA to warn member states about the devastating impacts of #climatechange.
Know more about @UNDP's #DontChooseExtinction@UNDP_India pic.twitter.com/EUkmo8WXyy