5 வயது சிறுவனை அடித்துக் கொன்ற பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!
அமெரிக்காவில் 5 வயது சிறுவனை அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்ட 23 வயதான பணிப்பெண் ஒருவர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்குகிறார்.
லொறீன் ஜெனட்(Lorraine Genet) எனும் இந்த யுவதி, நெவாடா மாநிலத்திலுள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்தவர்.
அவ்வீட்டிலிருந்த 5 வயது சிறுவனையும் 7 வயது சிறுமியையும் பராமரிப்பதற்காக இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 5 வயதான சிறுவன் தனது ஆடையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த லொறீன் ஜெனட்(Lorraine Genet), அச்சிறுவனை கடுமையாக தாக்கினாரென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுவன் தலையில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அச்சிறுவனின் தந்தை வீடு திரும்பியபோது, அச்சிறுவன் உணர்விழந்த நிலையில் காணப்பட்டான்.
அவனின் தந்தை கண்காணிப்பு கெமரா பதிவுளை ஆராய்ந்த நிலையில் அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
அச்சிறுவனை லொறீன்(Lorraine Genet)தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கில் தான் குற்றவாளி என லொறீன் ஜெனட்(Lorraine Genet) ஒப்புக்கொண்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்குகிறார் எனவும் 20 வருடங்களின் பின்னர் அவர் பரோலில் வெளிவர முடியும் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.