பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு நேர்ந்த கதி!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. இந்தநிலையில் விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை.
For the crime of dancing, these two young Iranians have been sentenced to 10 years and 6 months in prison.#AstiyazhHaghighi 21 & #AmirMohammadAhmadi,
— Masih Alinejad ?️ (@AlinejadMasih) January 30, 2023
22 danced in the streets in support of #WomanLifeFreedom revolution in Iran.
They don’t deserve such brutality.#MahsaAmini pic.twitter.com/Bs9VxqnxFV
இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி உள்ளது. அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி விசாரணையின் முடிவில், அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.