சீன ஜனாதிபதியை சந்தித்து பேச திட்டமிடும் ட்ரம்ப் ; தென்கொரியா பயணம்
ஒக்டோபரில் தென்கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவின் கியோங்ஜிங்கில் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு ஒக்டோபரில் ஆரம்பமாகி நவம்பர் வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரின் ஆலோசகர்கள் செல்ல இருப்பதோடு இதில் வர்த்தக அமைச்சர்களுடான சந்திப்பும் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய பயணத்தின் போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை ட்ரம்ப் சந்திக்க இருப்பதாகவும், அப்போது இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்கள், சர்வதேச பிரச்சினைகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.