வளர்ப்பு மகளை தந்தையே திருமணம் செய்யலாம்; ஈரானில் சர்ச்சைகுரிய சட்டம்
ஈரானில் 13 வயதுக்கு குறைந்த வளர்ப்பு மகளை, வளர்ப்புத் தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம், வளர்ப்பு மகள் அல்லது மனைவியின் முன்னாள் கணவர் மூலம் பெற்ற பெண் குழந்தைகளை, 13 வயது வரை வளர்ப்பதற்கு அனுமதிப்பது, பின்னர் திருமணம் செய்யும் உரிமையை வழங்குகிறது.
சர்வதேச அளவில் கடும் கண்டனம்
இந்த சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சர்வதேச அளவில் கடும் கண்டனங்களையும் பெற்றுள்ளது. ஈரானின் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு நலவாரிய அமைப்புகள் இந்த சட்டத்தை அதிர்ச்சியுடன் கண்டித்து வருகின்றன.
1979-ஆம் ஆண்டின் ஈரான் புரட்சிக்கு பிறகு பெண்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், திருமண வயது 18-ல் இருந்து 13 ஆக குறைக்கப்பட்டதாகவும், மேலும் அதை 9 வயதாக குறைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதுபோன்றச் சட்டங்கள் பெண்களின் உரிமைகளை பெரிதும் பாதிக்கின்றன என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.