போருக்குப்பின் லெபனானுக்கு சென்ற முதல் உக்ரேன் கப்பல்!
உக்ரேனின் முதல் தானியக் கப்பல் துருக்கிக் கடல்பகுதியில் பாதுகாப்புச் சோதனையைக் கடந்து லெபனானை நோக்கிச் செல்கிறது.
போருக்குப் பின் உக்ரேன் மேற்கொண்டுள்ள முதல் தானிய ஏற்றுமதி இதுதான் என தெரியவந்துள்ளது.
26,000 டன் சோளம் உக்ரேனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து லெபனானுக்குப் போகிறது. மொத்தம் 25 மில்லியன் டன் தானியங்கள் உக்ரேனியத் துறைமுகங்களில் முடங்கிக் கிடக்கின்றன.
அண்மையில் துருக்கி தலைமையில் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஒப்பந்தத்தின்படி உக்ரேனியத் தானியங்களை வெளியே கொண்டுசெல்ல ரஷ்யா அனுமதி கொடுத்திருக்கிறது.
உலகின் ஆகப்பெரிய தானிய ஏற்றுமதி நாடுகளான ரஷ்யாவும் உக்ரேனும் போரில் ஈடுபட்டதால் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது.
போருக்குப்பின் முதல் தானியக் கப்பல் பயணம் புதிய தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.