பிரான்ஸில் சிறைக்கைதி ஒருவரின் வெறிச்செயல்!
பிரான்ஸில் சிறைக்கைதி ஒருவர் மற்றொரு கைதியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் La Talaudière (Loire) நகர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய கைதி ஒருவரை அதே அறையில் வசித்த மற்றுமொரு கைது வெற்றுக்கைகளால் தாக்கியுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த நிலையில் Saint-Etienn மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாக்குதலுக்கு இலக்கான கைதி, மறுநாள் வியாழக்கிழமை மரணித்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.