கர்ப்பமடைந்ததே தெரியாமல் இருந்த இளம்பெண்: திடீரென பிறந்த குழந்தை!

Shankar
Report this article
தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த நிலையில், இளம்பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்லாந்தில் வசிக்கும் டில்டா கண்டலா என்ற இளம் பெண்ணிற்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.
குறித்த இளம்பெண் தூங்கி எழுந்தபோது வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் இரவு உணவு சரியில்லாததால் இந்த வலி ஏற்பட்டிருக்கும் என நினைந்துள்ளார்.
பின்னர் சிறுது நேரத்தில் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த, இளம் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த இளம் பெண் தெரிவித்தது,
நான் கர்ப்பமாக இருந்தது, சத்தியமாக எனக்கு தெரியவில்லை. வயிற்று வலி அதிகம் இருந்த போது உணவு சரியில்லை என்று தான் நினைத்தேன்.
இருப்பினும் இரு ஆண்டுகளுக்கு முன், என் மகள் பிறந்தபோது ஏற்பட்ட வலி போன்று இந்த வலியை உணர்ந்தேன். நான் வலியால் துடிப்பதை பார்த்த என் அம்மா, என்னிடம் கர்ப்பமடைந்திருக்கிறாயா? என்று கேட்டார். நான் அதற்கு தெரியவில்லை என்று கூறினேன்.
பின்னர் சில நிமிடங்களில் அழகான ஆண் குழந்தை பிறந்தது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியதாக குறித்த இளம்பெண் தெரிவித்தார். அதன்பின்பு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டேன். நானும், குழந்தையும் நன்றாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.