மொஸ்கோ செல்லும் ஐ.நா.வின் அணுசக்தி குழுவின் தலைவர்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மாஸ்கோவுக்குச் செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைனின் சபோர்ஸியா அணுசக்தி ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, சர்வதேச அணுசக்தி முகமை அணுசக்தி ஆலை குறித்து கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி ரஃபேல் க்ரோஸி ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன், அவர் ரஷ்ய அதிபர் புட்டினை சந்திக்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக மாநில அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திப்பார் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.