பிரித்தானியாவில் தனியார் கல்லூரியின் தலைவர் குடும்பத்துடன் சடலமாக மீட்பு!
பிரபல தனியார் பாசடாலையான எப்சம் கல்லூரியின் தலைவர் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் பள்ளி மைதானத்தில் உள்ள குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
45 வயதான எம்மா பாட்டிசன், 39 வயதான அவரது கணவர் ஜார்ஜ், மற்றும் ஏழு வயதான அவர்களது மகள் லெட்டி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 01:10 மணியளவில் இறந்து கிடந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்ரே காவல்துறையின் அதிகாரிகள், மூன்றாம் தரப்பு ஈடுபாடு இல்லை என்று தாங்கள் நம்புவதாகக் கூறினர். என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்துவோம் என்று நான் உறுதியளிக்க விரும்புவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தெற்கு லண்டனில் உள்ள க்ராய்டன் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஐந்து மாதங்களுக்கு முன்புதான் பாட்டிசன் எப்சமின் கல்லூரியின் தலைவரானார்.
மேலும் அவரது கணவர் ஜார்ஜ் ஒரு பட்டய கணக்காளர் ஆவார், அவர் டாங்கிள்வுட் 2016 என்ற நிர்வாக ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார் என்று கம்பெனிகள் ஹவுஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.