அமெரிக்காவில் இனவெறியின் உச்சம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
அமெரிக்காவில் இனவெறியின் உச்சத்தைக் காட்டும் சம்பவம் ஒன்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலதெல்பியாவிலுள்ள தீம் பார்க் ஒன்றிற்கு இரண்டு குழந்தைகள் தங்கள் உறவினருடன் சென்றுள்ளன.
அப்போது பிரபல கார்ட்டூனில் இடம்பெரும் Rosita என்னும் கதாபாத்திரத்தின் வேடமணிந்த ஒருவர் மக்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டும், ஹை ஃபைவ் கொடுத்துக்கொண்டும் வந்துள்ளார்.

இந்நிலையில் அதைக் கண்ட அந்த குழந்தைகளில் ஒன்று தன் கைகளை விரித்தபடி Rosita, Rosita என அழைத்தபடி அந்த பொம்மை வேடத்தை அணிந்திருந்த நபரை நோக்கி ஓடியது. அந்த நபரோ, உன்னை அணைக்க மாட்டேன் என்பதுபோல கையசைத்துவிட்டு, அந்தக் குழந்தையை விட்டு விலகிச்சென்றுவிட்டார்.

இப்படி Rosita வால் நிராகரிக்கப்பட்ட அந்தக் குழந்தைகள் இருவரும் கருப்பினக் குழந்தைகள் என்பதுதான் வேதனைக்குரிய விடயம். இந்நிலையில் குழந்தைகளின் தாயாகிய Jodi Brown, இந்த வீடியோவை சமூக ஊடகம் ஒன்றில் பகிர, காண்போர் கொந்தளித்துள்ளனர்.

அதோடு இனி அந்த தீம் பார்க்கில் கால் வைக்கமாட்டேன் என Jodi Brown கூற, பலரும் அந்த தீம் பார்க்கை புறக்கணிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இதனையடுத்து  நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ள தீம் பார்க் நிர்வாகம், வருங்காலத்தில் தனது ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்போம் எனவும்  உறுதியளித்துள்ளது.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        