பிரித்தானியாவின் கடந்த 24 மணிநேர கொரோனா தொற்று நிலவரம்!
பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவலில் தாக்கம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றால் 40,954 பேர் பாதிக்கப்பட்டதோடு 263 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 88 இலட்சத்து 53ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 39ஆயிரத்து 834 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 15இலட்சத்து 14ஆயிரத்து 985 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 913 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 71 இலட்சத்து 98 ஆயிரத்து 408 ஆக உயர்ந்துள்ளது.