ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு இராணுவம் ஆதரவு!
ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பதவியேற்றுள்ள மொஜ்தபா கமேனிக்கு (Mojtaba Khamenei) அந்நாட்டு ஆயுதப்படைகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆகியன உத்தியோகபூர்வமாகத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் ஈரான் அரசு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

புதிய தலைவரை (Mojtaba Khamenei) "நீதியானவர், அறிவார்ந்தவர், பக்தியுள்ளவர் மற்றும் புத்திசாலி" என இராணுவம் வர்ணித்துள்ளதுடன், அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் 'நிபுணர்கள் அவை' தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கமேனிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவருக்குத் தனது "உண்மையான மற்றும் வாழ்நாள் முழுவதற்குமான விசுவாசத்தை" பிரகடனப்படுத்தியுள்ளது.