ஈரானிய ட்ரோன் அச்சுறுத்தல் ; யுக்ரைனின் அனுபவத்தை நாடும் உலக நாடுகள்
ஈரானியத் தயாரிப்பு ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு கோரி, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 11 நாடுகளிடம் இருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.
யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இது குறித்துக் கூறுகையில்,

"உயிர்களைப் பாதுகாப்பதில் யுக்ரைனுக்கு இருக்கும் அனுபவம், ஆளில்லா வானூர்திகளை இடைமறிக்கும் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் போர்முறை அமைப்புகள் மற்றும் பயிற்சிகள் ஆகியவற்றில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன" என்று குறிப்பிட்டார்.
மேலும், யுக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அந்த நாட்டு மக்களின் உயிரைக் காக்கவும் உதவி வரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான பதிலளிக்க யுக்ரைன் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைப் பாதுகாக்க யுக்ரைன் தனது நிபுணர்களையும், ட்ரோன் இடைமறிப்பு கருவிகளையும் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
I held a Staff meeting. Our primary focus was the destabilization caused by the war in Iran and the corresponding risks for global markets, the countries of the region, and Ukraine’s closest partners who support us in defending against Russian aggression. The issue is complex –… pic.twitter.com/ibFpnGH15i
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 9, 2026