உக்ரைனுக்கு வரும் அதி சக்திவாய்ந்த ஆயுதங்கள்!
டான்பாஸ் பிராந்தியத்தில் அதன் பாதுகாப்பை வலுப்படுத்த உக்ரைனுக்கு சோவியத்தால் தயாரிக்கப்பட்ட டாங்கிகளை வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)யால் கோரப்பட்ட உபகரணங்களின் பரிமாற்றம் விரைவில் தொடங்கும் என்று பெயரிடப்படாத அதிகாரி கூறினார்.
அதன்படி எத்தனை டாங்கிகள் அனுப்பப்படும் அல்லது எந்த நாடுகளில் இருந்து வரும் என்பதை வெளியிட அதிகாரி மறுத்துவிட்டார்.
உக்ரைன் தனது துருப்புக்களுக்கு அவற்றைக் கையாள்வதில் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதால், சோவியத் தயாரிப்பான டாங்கிகள் மற்றும் ஜெட் விமானங்களைத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.