அடுத்த தாக்குதல் இங்கு தான்; இஸ்ரேல் அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள்!
கடந்த ஆண்டு ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போர் முவுட்ட்கு வராத நிலையில் , ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 2.3 மில்லியனில் 1.4 மில்லியன் மக்கள் ரஃபா நகரில் உள்ளன.
1.4 மில்லியன் மக்கள் வெளியேற்றப்படுவார்கள்
ரஃபா பாதுகாப்பான பகுதியை என காசாவின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தாக்குல் நடத்தப்பட உள்ளதால், மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரஃபா எல்லை முக்கியமானதாக திகழ்கிறது. இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஏற்கனவே மக்கள் பட்டினி விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில்,
"1.4 மில்லியன் மக்கள் அல்லது அதில் குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வது அவசியம். எங்கே?.
சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அதற்கான ஒரு இடத்தை உருவாக்குவோம். ஹமாஸ் நிர்வகித்து வரும் நான்கு பட்டாலியன்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகவதற்கு மக்களை வெளியேற்றுவது முக்கிய பகுதியாகும்" என்றார்.
அதேவேளை இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 31 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.