மனைவியைப் பிரிந்த நபர்... விவாகரத்துக்கு காத்திருந்த நிலையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்

Canada
By Balamanuvelan Jun 14, 2021 12:30 PM GMT
Report

கனேடியர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவியைப் பிரிந்த நிலையில், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். விவாகரத்து கிடைத்துவிடும் என்று காத்திருந்த நிலையில், தன் விவாகரத்து விண்ணப்பமே நீதிமன்றம் சென்று சேரவில்லை என்பது தெரியவர, ஏமாந்து போயிருக்கிறார் அவர். 2017ஆம் ஆண்டு தன் மனைவியைப் பிரிந்தார் Aaron Penman.

சில நாடுகளில், வழக்குக்காக சட்டத்தரணி ஒருவரை அணுகுவதற்கு பதில், Paralegal என்பவரை அணுகுகிறார்கள். இந்த Paralegal என்பவர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவார், ஆனால், அவர் முழுமையான சட்டத்தரணி கிடையாது.

ஒரு சட்டத்துறை உதவியாளர் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட சட்டத்துறை உதவியாளரான Nyasha (Nash) Muyambo என்பவரை தனது விவாகரத்து வழக்குக்காக அணுகியுள்ளார் Aaron.

மனைவியைப் பிரிந்த நபர்... விவாகரத்துக்கு காத்திருந்த நிலையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் | The Person Who Divorced His Wife

தனது வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்த Aaron, ஒரு நாள் நீதிமன்றத்துக்கு போன் செய்து விசாரிக்க, அப்போதுதான் தன் பெயரில் விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்படவே இல்லை என்ற உண்மை தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார் Aaron. இதற்கிடையில், Muyambo போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, தங்கியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் Aaron ஆல்பர்ட்டா சட்டத்துறை உதவியாளர் கூட்டமைப்பை அணுக, Muyambo அந்த கூட்டமைப்பில் உறுப்பினரே அல்ல என்பது தெரியவந்துள்ளது. பொலிசாரிடம் உதவி கோரியபோது, செலவிட்ட பணத்தை திரும்பக் கோர வழக்கு வேண்டுமானால் தொடுக்கலாம், அப்படியே வழக்குத் தொடுத்தாலும், Muyambo தன்னை ஏமாற்றிய தொகையைவிட, தான் அதிகம் செலவிடவேண்டியிருக்கும் என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்டுள்ளார் Aaron.

இதற்கிடையில், இதேபோல வேறு சிலரை ஏமாற்றியதற்காகவும், மோசடி வழக்கு ஒன்று தொடர்பாகவும் பொலிசார் Muyamboவைத் தேடி வருவதும் தெரியவந்துள்ளது. ஆக, விவாகரத்துக்காக முயற்சித்து, பணமும் செலவு செய்தும் இன்னமும் மணமானவர் என்ற நிலையிலேயே தொடரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் Aaron.

மனைவியைப் பிரிந்த நபர்... விவாகரத்துக்கு காத்திருந்த நிலையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் | The Person Who Divorced His Wife

மனைவியைப் பிரிந்த நபர்... விவாகரத்துக்கு காத்திருந்த நிலையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் | The Person Who Divorced His Wife

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US