பாரிஸில் முதன் முறையாக Loto சீட்டிழுப்பில் 25 மில்லியன் யூரோக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் நபர்!
பாரிஸில் Loto சீட்டிழுப்பில் 25 மில்லியன் யூரோக்கள் பணத்தினை நபர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சீட்டுழுப்பில் அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இந்நிலையில் 9, 17, 24, 36 மற்றும் 45 ஆகிய ஐந்து இலக்கங்களை சரியாக கணித்து, நபர் ஒருவர் 25 மில்லியன் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதியில் இருந்து சீட்டிழுக்கப்பட்டு வரும் இத்தொகையினை- அதுவரை எவரும் வெற்றி பெறாத நிலையில், தற்போது பரிசைச் சேர்ந்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்துள்ளது.
Loto சீட்டிழுப்பில் 25 மில்லியன் பரிசுத்தொகை வெல்வது வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் Brittany தீவைச் சேர்ந்த ஒருவர் 30 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தார்.